செய்திகள்
டொனால்டு டிரம்ப்

அமெரிக்க பாராளுமன்ற வன்முறை: ’இது பற்றி நான் டிரம்ப் இடம் பேச முயற்சிப்பேன்’ - பாஜக அரசின் மத்திய மந்திரி பேச்சு

Published On 2021-01-09 14:55 GMT   |   Update On 2021-01-09 14:55 GMT
அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக நான் டிரம்ப் இடம் பேச முயற்சிப்பேன் என ஆளும் பாஜக அரசில் இடம்பெற்றுள்ள மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அந்நாட்டு பாராளுமன்றமான கேப்பிடல்ஸ் கட்டிடத்தில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.

அப்போது அந்த கட்டிடத்திற்குள் நுழைந்த குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் போலீஸ் உள்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்க வரலாற்றில் இந்த நிகழ்வு ஒரு கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பல்வேறு நாடுகளும், நாடுகளின் தலைவர்களும் இந்த வன்முறை தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



அந்த வகையில், இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய பாஜக அரசில் மத்திய மந்திரியாக செயல்பட்டு வருபவருமான ராம்தாஸ் அத்வாலே கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அத்வாலே கூறியதாவது:-

கேப்பிட்டல்ஸ் கட்டிடத்தில் நடைபெற்ற வன்முறை கண்டனத்திற்கு உரியது. இது குடியரசு கட்சிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அமெரிக்கா மற்றும் சுதந்திரத்திரத்தை அவமதிக்கும் செயல்.

அதனால் தான் நாம் நமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளோம். இது குறித்து நான் அவரை (டொனால்டு டிரம்ப்) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரிடம் பேச முயற்சிப்பேன்

என்றார்.     
Tags:    

Similar News