செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் 10 ஏக்கரில் மலர் தோட்டம்

Published On 2021-01-09 09:45 GMT   |   Update On 2021-01-09 09:45 GMT
திருப்பதி ஏழுமலையானுக்கு பயன்படுத்தப்படும் மலர்களுக்காக இயற்கை வளைவு பாறை அருகே 10 ஏக்கரில் வெங்கடேஸ்வர புனித மலர் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தேவையான மலர்கள் மற்றும் துளசி, வில்வம் உள்ளிட்டவற்றை பக்தர்கள் நன்கொடையாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தேவஸ்தானத்திற்கு தேவையான அனைத்து மலர்களையும் திருமலையில் வளர்க்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக சிலாதோரணம், (இயற்கை வளைவு பாறை) கோகர்பம் ஆகிய பகுதியில் 10 ஏக்கரில் மலர் தோட்டம் அமைக்கும் பணியை அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, தலைமை செயல் அதிகாரி ஜவகர் ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது:-

ஏழுமலையானுக்கு பயன்படுத்தப்படும் மலர்களுக்காக இயற்கை வளைவு பாறை அருகே 10 ஏக்கரில் வெங்கடேஸ்வர புனித மலர் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் வாழை, துளசி, சம்பங்கி, தர்பை, பாரிஜாதம், சந்தனம், வனமல்லி, மல்லி, சாமந்தி, மாமரம் உள்ளிட்ட 25 விதமான மரக்கன்றுகள் நடப்பட்டது. சந்தனம், செம்மரச்செடிகள் வளர்க்கப்பட உள்ளது. இதற்காக ரூ.1.5 கோடி ஒதுக்கப்பட உள்ளது என்றார்.
Tags:    

Similar News