செய்திகள்
கோப்புப்படம்

ஜூலை 3-ந்தேதி ஜே.இ.இ. அட்வான்ஸ் நுழைவுத்தேர்வு

Published On 2021-01-07 20:21 GMT   |   Update On 2021-01-07 20:24 GMT
வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.
புதுடெல்லி:

ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. போன்ற இந்திய அளவிலான தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு முதன்மை மற்றும் ‘அட்வான்ஸ்’ என 2 வகையாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. முதன்மைத் தேர்வு இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதன்படி பிப்ரவரி 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலும், மார்ச் 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையிலும், ஏப்ரல் 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும், மே மாதம் 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும் தேர்வு நடைபெறும்.

இந்த நிலையில் ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு தேதியை மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று அறிவித்தார். வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு நடைபெறும் என்று காணொலியில் தகவல் தெரிவித்தார். கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் கொரோனா கால சலுகையாக 75 சதவீத பிளஸ்-2 மதிப்பெண்கள் தகுதியை தேர்வு முகமை தளர்த்தி இருப்பதாக அவர் தெரிவித்தார். ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 16-ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News