செய்திகள்
மந்திரி சுரேஷ்குமார்

கர்நாடகத்தில் ஜூன் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: மந்திரி சுரேஷ்குமார் அறிவிப்பு

Published On 2021-01-07 01:54 GMT   |   Update On 2021-01-07 01:54 GMT
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும், பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு மே மாதம் நடக்கும் என்றும் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா பரவலை அடுத்து 9 மாதங்களுக்கு பிறகு கடந்த 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்கு முன்பு அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக கற்பித்தல் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு 50 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு மே மாதம் 2-வது வாரத்திலும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் மாதம் முதல் வாரத்திலும் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு படிக்க வேண்டிய பாடத்திட்டங்களை அரசு முடிவு செய்துள்ளது.

இந்த விவரங்களை அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு சுமை ஏற்படாத வகையில் பாடத்திட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் பாடத்திட்டத்தை குறைக்கவில்லை. பள்ளிகள் அளவில் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News