செய்திகள்
பனிப்பொழிவு

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு : சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலி

Published On 2021-01-06 20:40 GMT   |   Update On 2021-01-06 20:40 GMT
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
ஸ்ரீநகர்:

காஷ்மீரில் தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் குடியிருப்புகளும், சாலைகளும் பனியால் மூடியபடி உள்ளன. இந்தநிலையில் ஸ்ரீநகரின் ஹஸ்ராத்பால் பகுதியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. செய்யது எம். அக்கூன் என்பவரது வீட்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் எச்.சி.முர்மு என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அதிக பனிப்பொழிவு காரணமாக திடீரென அவரது வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதேபோல் குப்வாரா மாவட்டம் ஷா மொகல்லா திரிக்காம் என்ற இடத்திலும் பனிப்பொழிவு காரணமாக கூரை இடிந்து விழுந்தது. இதில் ராணி பேகம் என்ற மூதாட்டி படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கடும் பனிப்பொழிவு காரணமாக பல வீடுகள் சேதம் அடைந்திருப்பதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே தொடர் பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக நகர் சர்வதேச விமான நிலையத்தில் 4-வது நாளாக விமான சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.
Tags:    

Similar News