மத்திய அரசு அறிவித்ததாக கூறி வைரலாகும் பகீர் தகவல் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மத்திய அரசு அறிவிப்பு என கூறி வைரலாகும் பகீர் தகவல்
பதிவு: ஜனவரி 06, 2021 11:25
கோப்புப்படம்
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு நாடு முழுக்க பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பின் மூலம் ஆயுர்வேத மருத்துவர்கள் சிலவகையான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.
இதைத் தொடர்ந்து மருந்து விற்பனையாளர்கள் சொந்தமாக மருத்துவமனையை திறக்கலாம் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்ததாக கூறும் செய்தித்தாள் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற அறிவிப்புக்கு சட்டத்தில் ஏற்கனவே இடம் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் பதிவு பற்றி மேற்கொண்ட ஆய்வில், மத்திய அரசு இதுபோன்ற அறிவிப்பை வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது. மத்திய அரசின் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பார்மசி கவுன்சில் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.
அந்த வகையில் வைரல் தகவல்களில் உள்ளது போன்று மருந்து விற்பனையாளர்கள் மருத்துவமனையை திறக்க மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Related Tags :