செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் தமிழுக்கான அகாடமி உருவாக்கம் - ‘வாழ்க தமிழ்’ என்றும் கெஜ்ரிவால் தமிழில் டுவீட்

Published On 2021-01-04 17:03 GMT   |   Update On 2021-01-04 17:03 GMT
தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக டெல்லியில் தமிழுக்கான அகாடமி அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

தமிழ் மொழி மற்றும் தமிழி மக்களின் கலாசாரத்தை ஊக்குவிக்கும் விதமாக தலைநகர் டெல்லியில் தமிழுக்கான அகாடமியை டெல்லி அரசு உருவாக்கியுள்ளது.

தமிழ் மொழியை ஊக்குவிக்கும் விதமாக அகாடமி தொடங்கியதற்காக ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்றுவரும் டெல்லி அரசுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் "டெல்லியில் தமிழ் அகாடமி" அமைத்துள்ள டெல்லி முதல்வர் @CMODelhi ( அரவிந்த் கெஜ்ரிவால்) மற்றும் துணை முதல்வர் @msisodia (மனீஷ் சிசோடியா) ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

என தெரிவித்தார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

டெல்லி அரசு தமிழ் அகாடமி அமைத்துள்ளது என்பது குறித்து கேள்விப்பட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இது கலாச்சார இணைப்பை வளர்க்கவும், தமிழ்மொழியின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் உதவும் 

இந்த முயற்சியை மேற்கொண்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோருக்கு திமுக சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டிருந்த டுவிட்டர் பதிவை மேற்கொள் காட்டி டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதில் தற்போது ஒரு டுவீட் ஒன்றை 
செய்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

’பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை. வாழ்க தமிழ்!’  

என பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News