செய்திகள்
சசி தரூர்

கோவாக்சின் தடுப்பூசிக்கு முன்கூட்டியே அனுமதி அளித்தது ஆபத்தானது -சசி தரூர் எச்சரிக்கை

Published On 2021-01-03 10:28 GMT   |   Update On 2021-01-03 10:28 GMT
மத்திய அரசு கோவாக்சின் தடுப்பூசி மருந்துக்கு அனுமதி அளித்திருப்பது ஆபத்தில் போய் முடியும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர் எச்சரித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. பரிசோதனை மற்றும் ஆய்வு முடிவுகள் திருப்தியாக இருப்பதால், இந்த மருந்துகளை அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. எனவே, இன்னும் சில தினங்களில் இந்த மருந்துகளைப் பயன்படுத்தி தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கும் கோவாக்சின் தடுப்பூசிக்கு முன்கூட்டியே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் அதிருப்தி தெரிவித்துள்ளார். மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவடையாத நிலையில், மருந்தை மக்களுக்கு செலுத்த அனுமதி அளித்திருப்பது ஆபத்தில் போய் முடியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

‘கோவாக்சின் மருந்துக்கு அனுமதி அளித்தது பற்றி சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் விளக்கம் அளிக்க வேண்டும். முழு பரிசோதனையும் முடியும் வரையில், மருந்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதேசமயம் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணியை தொடங்கலாம்’ என்றும் சசி தரூர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News