செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் 5-ந் தேதி தியேட்டர்கள் திறக்க அனுமதி

Published On 2021-01-02 21:55 GMT   |   Update On 2021-01-02 21:55 GMT
கேரளாவில் 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேரளாவில் 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதுபோல் வழிபாட்டு தலங்களில் 5-ந் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் 7 நாட்கள் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா கடந்த மாதம் நடைபெற வில்லை. இதனால் இந்த விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி முதல் திருவனந்தபுரம், கொச்சி, பாலக்காடு மற்றும் தலச்சேரியில் நடைபெறும்.

திருவனந்தபுரத்தில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையும், கொச்சியில் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையும், தலச்சேரியில் 23 முதல் 27-ந் தேதி வரையும், பாலக்காட்டில் மார்ச் 1 முதல் 5 - ந் தேதி வரையும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News