செய்திகள்
விவசாயிகள் போராட்டம்

போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி மரணம்: 46-வது உயிர்ப்பலி

Published On 2021-01-02 07:02 GMT   |   Update On 2021-01-02 07:02 GMT
டெல்லி-உத்தர பிரதேச எல்லையில் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வயது முதிர்ந்த விவசாயிகள் குளிரை தாங்க முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். எனினும் தொடர்ந்து போராட்டக்களத்திலேயே இருப்பதால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. 

இந்நிலையில், டெல்லி-உத்தர பிரதேச எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலம் என தகவல் வெளியாகி உள்ளது. குளிர் காரணமாக உடல் வெப்ப நிலை மிகவும் குறைந்ததால் அவர் இறந்திருக்கலாம் என்றும், பிரேத பரிசோதனை செய்ய மற்ற விவசாயிகள் அனுமதிக்காததால் விரிவான விசாரணை மேற்கொள்ள முடியவில்லை என்றும் காசியாபாத் மருத்துவ அலுவலர் கூறி உள்ளார்.

உயிரிழந்த விவசாயி, உத்தர பிரதேசத்தின் பாக்பாத் மாவட்டத்தைச் சேர்ந்த கல்தான் சிங் (வயது 57) என்பது தெரியவந்துள்ளது. 

அரசின் ஈகோவிற்கு மேலும் ஒரு விவசாயியை இழந்திருப்பதாகவும், போராட்டத்தின்போது இதுவரை 46 விவசாயிகள் இறந்திருப்பதாகவும் விவசாயிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஆணவம் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News