பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் 2020-ம் ஆண்டு குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் 2020ம் ஆண்டில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளது - டிஜிபி தில்பாக் சிங்
பதிவு: ஜனவரி 01, 2021 03:40
போலீஸ் டிஜிபி தில்பாக் சிங்
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீரில் இந்தாண்டு 15 போலீசார் தங்கள் பணியின் போது கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 3,500 போலீசார் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் மீண்டுள்ளனர்.
2018, 2019 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
அதேநேரத்தில், 2019 ஆண்டுடன் ஒப்பிடுகையில், பயங்கரவாத அமைப்பில் சேர்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும், அவர்களில் 70 சதவீதம் பேரை மீட்டு, கைது செய்துள்ளோம் என்பது சாதகமான அம்சமாகும்.
பாகிஸ்தான் ஊடுருவல் முயற்சிகள் இருந்தபோதிலும், கடந்த 3, 4 ஆண்டுகளில் இந்த 2020ம் ஆண்டு ஊடுருவல் வழக்குகள் மிகக்குறைவாகும். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் பணத்தை டிரோன்கள் மூலம் வழங்க முயன்று தோல்வியடைந்தனர்.
ஜம்முவில் 12 பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 3 ஆக குறைந்துள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள அந்த பயங்கரவாதிகளை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தார்.
Related Tags :