செய்திகள்
சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபே

மத்திய சுகாதாரத் துறை இணை மந்திரிக்கு கொரோனா தொற்று

Published On 2020-12-28 19:45 GMT   |   Update On 2020-12-28 19:48 GMT
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த் தொற்றால் மத்திய உள்துறை மந்திரி உள்பட நாட்டில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டடுள்ளதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட டுவிட்டரில் பதிவில், கொரோனா நோய்த் தொற்றின் லேசான அறிகுறி தெரிந்தது. இதையடுத்து, சோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, நான் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டேன். மேலும், கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மக்கள் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது சூரிய வெளிச்சத்தில் நிற்கவேண்டும். சூரிய வெளிச்சம் 'விட்டமின் டி’ ஊட்டச்சத்தை உருவாக்குகிறது. இந்த விட்டமின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் உள்ளிட்ட அனைத்து வைரஸ்களையும் கொல்லும் என கருத்து தெரிவித்தவர் அஸ்வினி குமார் சவுபே என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News