செய்திகள்
சவுகான் - ராகுல்

ராகுல் காந்தி எந்த நாட்டில் உள்ளார் என யாருக்கும் தெரியவில்லை - ம.பி. முதல்மந்திரி சவுகான்

Published On 2020-12-28 11:19 GMT   |   Update On 2020-12-28 12:12 GMT
ராகுல் காந்தி எந்த நாட்டில் உள்ளார் என யாருக்கும் தெரியவில்லை என்று பாஜக மூத்த தலைவரும் மத்தியபிரதேச முதல்மந்திரியுமான சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
போபால்:

காங்கிரஸ் கட்சி 1885 ஆம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி தொடங்கப்பட்டது. அந்த கட்சியின் 136-வது நிறுவன நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி   தனது தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுர்ஜிவாலா நேற்று தெரிவித்தார்.

அவர் எந்த நாட்டிற்கு சென்றுள்ளார் என்ற தகவல் குறித்து அவர் தெரிவிக்கவில்லை. ஆனால், இத்தாலி நாட்டிற்கு ராகுல் சென்றுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளதால் இன்று நடைபெற்று வரும் காங்கிரஸ் நிறுவன நாளில் அவர் பங்கேற்கவில்லை. இந்த விவகாரத்தை முன்வைத்து பாஜக தலைவர்கள் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல்காந்தியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய பிரதேச முதல்மந்திரியுமான சிவராஜ் சிங் சவுகான் இன்று கூறியதாவது:-  

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவரும், மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்கலாம் என கருதப்படுபவருமானவர் (ராகுல் காந்தி) அக்கட்சியின் நிறுவன நாளின் பங்கேற்காமல் இருப்பது அக்கட்சிக்கு துரதிஷ்டவசமானது.
 
அவர் எந்த நாட்டில் உள்ளார் என யாருக்கும் தெரியவில்லை. அவர் இங்கு இல்லாதது அவர் மீதும் அவரது கட்சி மீதும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

என்றார். 
Tags:    

Similar News