செய்திகள்
சுகாதார மற்றும் மருத்துவ கல்வி மந்திரி சுதாகர்

இங்கிலாந்தில் இருந்து கர்நாடகா வந்த 150 பேர் எங்கே?- சுகாதாரத்துறையினர் தேடல்

Published On 2020-12-28 09:35 GMT   |   Update On 2020-12-28 09:35 GMT
புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதால் இங்கிலாந்தில் இருந்து 150 பேர் கர்நாடகாவிற்கு வந்துள்ளனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி சுகாதாரத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரு:

இங்கிலாந்தில் பரவத் தொடங்கி உள்ள புதிய வகை கொரோனா வைரஸ்பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்தில் இருந்து அதிகப்படியான நபர்கள் இந்தியா திரும்புவதால் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்க பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாடு திரும்புபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கிலாந்திலிருந்து இந்தியா வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து 150 பேர் கர்நாடகாவிற்கு வந்துள்ளனர். யார்? யார்? நாடு திரும்பினார்கள் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இது குறித்து சுகாதார மற்றும் மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் கூறுகையில் நாடு திரும்பிய 150 பேரின் பட்டியலை வைத்து அவர்களை தேடும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையானது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக மையங்கள் அமைக்கப்பட்டு சுகாதரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

Tags:    

Similar News