செய்திகள்
மம்தா பானர்ஜி

நந்திகிராம் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார் மம்தா பானர்ஜி

Published On 2020-12-28 07:57 GMT   |   Update On 2020-12-28 07:57 GMT
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதிக்கான சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் பிரசார பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. ஆட்சியை தக்க வைக்க திரிணாமுல் காங்கிரசும், ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் பாஜகவும் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் வெளியேறுவது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில், கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் நந்திகிராமில் வரும் 7ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான 
மம்தா பானர்ஜி
 கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், இந்த சுற்றுப்பயணத்தை தற்போது மம்தா பானர்ஜி ரத்து செய்துள்ளார். 

நந்திகிராம் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சுவெந்து அதிகாரி ராஜினாமா செய்ததால், மம்தா பானர்ஜியின் நந்திகிராம் வருகையை தொண்டர்கள் மிகவும் எதிர்நோக்கியிருந்தனர். வடக்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நந்திகிராம் வருவதாக இருந்தது. ஆனால் இப்போது சுற்றுப்பயணத்தை ரத்து செய்திருப்பதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News