செய்திகள்
மந்திரி நாகேஷ்

கர்நாடகத்தில் இரவு 10 மணிக்கு மதுக்கடைகள், கேளிக்கை விடுதிகள் மூடல்: மந்திரி நாகேஷ்

Published On 2020-12-24 01:59 GMT   |   Update On 2020-12-24 01:59 GMT
ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை தொடர்ந்து கர்நாடகத்தில் இரவு 10 மணிக்கு மதுக்கடைகள், கேளிக்கை விடுதிகள் மூடப்படும் என்று மந்திரி நாகேஷ் தெரிவித்தார்.
கோலார் தங்கவயல் :

கர்நாடக கலால் துறை மந்திரி நாகேஷ் முல்பாகலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இங்கிலாந்தில் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இதனால் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்கள் கண்டறியப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 1-ந்தேதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இதையொட்டி கர்நாடகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் வரை இரவு 10 மணிக்கு மதுக்கடைகள் மூடப்படும். அதுபோல் கேளிக்கை விடுதிகள், சொகுசுவிடுதிகளும், பப்புகள், கிளப்புகள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அரசின் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News