செய்திகள்
பிரதமர் மோடி, அமித்ஷா

ஜம்மு–காஷ்மீரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க அனைத்தையும் மோடி அரசு செய்கிறது: அமித்ஷா

Published On 2020-12-23 15:12 GMT   |   Update On 2020-12-23 15:12 GMT
ஜம்மு–காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகத்தை மீட்டெடுக்க மோடி அரசாங்கம் தேவையான எல்லாவற்றையும் செய்து வருகிறது’ என்று அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
ஜம்மு:

ஜம்மு–காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், முதல் முறையாக அங்கு நடந்த மாவட்ட வளர்ச்சி மன்ற தேர்தலில், 74 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது.

இதற்காக ஜம்மு–காஷ்மீர் மக்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாநன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘மாவட்ட வளர்ச்சி மன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாக்களித்த ஜம்மு–காஷ்மீர் சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த நன்றி. ஜம்மு–காஷ்மீரின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பா.ஜனதா தொடர்ந்து பாடுபடும்.

ஜம்மு–காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகத்தை மீட்டெடுக்க மோடி அரசாங்கம் தேவையான எல்லாவற்றையும் செய்து வருகிறது’ என்று தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News