செய்திகள்
கோப்புப்படம்

திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்ததால் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பா.ஜனதா எம்.பி.

Published On 2020-12-22 23:14 GMT   |   Update On 2020-12-22 23:14 GMT
மாநில பா.ஜனதா இளைஞரணி தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான சவுமித்ரா கானின் மனைவி சுஜாதா கான் பா.ஜனதாவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தில் வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள் பா.ஜனதாவில் சேர்ந்து வருகின்றனர். இந்த சூழலில், நேற்று முன்தினம் மாநில பா.ஜனதா இளைஞரணி தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான சவுமித்ரா கானின் மனைவி சுஜாதா கான் பா.ஜனதாவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் சவுமித்ரா கான் மனைவி மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளார். மனைவியிடம் இருந்து விவகாரத்து கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக சவுமித்ரா கான் கூறுகையில், எனது குடும்பத்தை உடைத்தவர்களை (திரிணாமுல் காங்கிரஸ்) நான் மன்னிக்க மாட்டேன். சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்றார்.

நாடாளுமன்ற தேர்தலின் போது, கணவரின் வெற்றிக்காக சுஜாதா கான் கடுமையாக உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News