செய்திகள்
வாக்கு எண்ணிக்கை

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக - முன்னிலை நிலவரம்

Published On 2020-12-22 10:51 GMT   |   Update On 2020-12-22 10:51 GMT
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் சில இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 280 மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தொகுதிகளுக்கான தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றது.

இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லாவின் அரசியல் கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி இணைந்து அமைத்துள்ள குப்கர் கூட்டணி, புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 2 ஆயிரத்து 181 பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. அதில், பல இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 14 மாவட்ட வளர்ச்சி கவுன்சில் இடங்களை கொண்ட ஸ்ரீநகருக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் வெற்றிபெற்ற கட்சிகள் விவரம்:-

* சுயேட்சைகள் 7 இடங்களில் வெற்றி

* அப்னி கட்சி 3 இடங்களில் வெற்றி

* பாஜக 1 இடத்தில் வெற்றி

* மக்கள் ஜனநாயக கட்சி 1 இடத்தில் வெற்றி

* தேசிய மாநாட்டுக்கட்சி 1 இடத்தில் வெற்றி

* ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் 1 இடத்தில் வெற்றி

என ஸ்ரீநகர் மாவட்ட தேர்தல் அதிகாரி சஷீத் சௌதிரி தெரிவித்துள்ளார்.

ஜம்முகாஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தலில் ஸ்ரீநகரில் பாஜக தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த கட்சியை சேர்ந்த அஜீஸ் ஹசன் என்ற வேட்பாளர் ஸ்ரீநகரின் பல்ஹமா பகுதியில் உள்ள ஹொனொம்-2 என்ற தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

மேலும், 155 இடங்களுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி,

குப்கர் கூட்டணி - 88 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பாஜக - 46 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் 21 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பெரும்பாலான இடங்களில் மெகபூபா மும்தி, பரூக் அப்துல்லா இணைந்து அமைத்துள்ள குப்கர் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
Tags:    

Similar News