செய்திகள்
திலீப் கோஷ்

கொரோனாவை போன்றே திரிணாமுல் காங்கிரசாலும் என்னை ஒன்றும் செய்யமுடியவில்லை - பாஜக தலைவர் பேச்சு

Published On 2020-12-21 15:59 GMT   |   Update On 2020-12-21 15:59 GMT
கொரோனாவை போன்றே திரிணாமுல் காங்கிரசாலும் தன்னை ஒன்றும் செய்யமுடியவில்லை என்று மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

மேற்குவங்காளத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரசும், இந்த முறை மேற்குவங்காளத்தை கைப்பற்றிவிட வேண்டும் என பாஜகவும் தீவிர முயற்சி
மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரசில் உள்ள மூத்த தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய பணிக்கு இடமாற்றம் செய்த விவகாரத்திலும் மத்திய பாஜக அரசுக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகிறது.

இந்நிலையில், மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் துர்காபூர் பகுதியில் இன்று தேர்தல் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனாவை போன்றே திரிணாமுல் காங்கிரசாலும் என்னை ஒன்றும் செய்யமுடியவில்லை. கொரோனாவுக்கு நாம் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டோம். ஆனாலும், வைரஸ் எப்போது போகும் என நமக்கு தெரியாது. ஆனால், மேற்குவங்காளத்தில் இருந்து அடுத்த மே மாதம் திரிணாமுல் காங்கிரஸ் காணாமல் போய்விடும். திரிணாமுல் காங்கிரஸ் வைரசுக்கு நான் தடுப்பூசி வைத்துள்ளேன்

என்றார்.
Tags:    

Similar News