செய்திகள்
மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்

Published On 2020-12-18 06:29 GMT   |   Update On 2020-12-18 06:32 GMT
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி உள்ளனர்.
கொல்கத்தா:

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில், கருத்து வேறுபாடு காரணமாக எம்எல்ஏக்கள், மாவட்ட அளவிலான கட்சி தலைவர்கள் பதவி விலகி வருகின்றனர். சமீபத்தில் அக்கட்சியைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் கட்சியில் இருந்தும் விலகினார். அதன்பின்னர் எம்எல்ஏ ஜிதேந்திர திவாரி நேற்று கட்சியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ சில்பத்ரா தத்தா இன்று கட்சியில் இருந்து விலகி உள்ளார். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முக்கிய தலைவர்கள் விலகுவது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய கட்சி என்றும், ஓரிரு தலைவர்கள் செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரடா முகர்ஜி தெரிவித்தார்.
Tags:    

Similar News