செய்திகள்
வேளாண் சட்ட நகலை கிழித்தெறிந்த கெஜ்ரிவால்

வேளாண் சட்ட நகலை கிழித்தெறிந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

Published On 2020-12-17 12:53 GMT   |   Update On 2020-12-17 12:53 GMT
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி அரசு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், சட்டங்களின் நகலை சட்டமன்றத்திலேயே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிழித்தெறிந்தார்.
புதுடெல்லி:

டெல்லி சட்டமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது டெல்லி அரசு. விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி எம்எல்ஏகள் மகேந்திர கோயல் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்ட நகல்களை டெல்லி சட்டமன்றத்திற்குள் கிழித்தெரிந்தார்.

இவரைத்தொடர்ந்து வேளாண் சட்டங்களின் நகலை சட்டமன்றத்திலேயே கிழித்தெறிந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். மேலும் அவர் பேசுகையில், கொரோனா காலத்திலும் அவசர அவசரமாக வேளாண் சட்டங்களை கொண்டு வர வேண்டிய தேவை என்ன எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிரிட்டிஷ் அரசு போல  மத்திய அரசு செயல்படக்கூடாது என்றும் பேசினார்.
Tags:    

Similar News