செய்திகள்
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய பிரதமர் மோடி

காணொளி உச்சிமாநாடு- வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் மோடி இன்று பேச்சுவார்த்தை

Published On 2020-12-17 03:24 GMT   |   Update On 2020-12-17 03:24 GMT
கொரோனா காலத்திற்கு பிந்தைய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தியா, வங்கதேச பிரதமர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
புதுடெல்லி:

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இன்று காணொளி வாயிலாக உச்சிமாநாட்டை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்களும் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளனர். மேலும், கொரோனா காலத்திற்கு பிந்தைய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பேசுகிறார்கள்.

இந்தியாவும் வங்கதேசமும், நட்புறவை மேம்படுத்தி, தொடர்ந்து வழக்கமான பரிமாற்றங்களை பராமரித்து வருகின்றன. 

பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவுக்கு வந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம் முஜிப் போர்ஷோவின் வரலாற்று நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ செய்தி வெளியிட்டார்.  கொரோனா தொற்றுநோய் பரவி வரும் நிலையில், இரு தலைவர்களும் இதுபற்றி தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News