செய்திகள்
கோப்புப்படம்

வெளிநாட்டு இந்தியர்களுக்கு தபால் ஓட்டு தாமதம் ஆகும்? - விரிவான ஆலோசனை நடத்த அரசு முடிவு

Published On 2020-12-16 00:23 GMT   |   Update On 2020-12-16 00:23 GMT
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தபால் ஓட்டு போடும் வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து விரிவான ஆலோசனையை நடத்த மத்திய அரசு விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:

இந்திய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வெளிநாடு வாழ்இந்தியர்கள் தங்களுக்கு தபால் ஓட்டு போட வாய்ப்பு தர வேண்டும் என்று கோரி வந்தனர்.

இதை தேர்தல் கமிஷன் ஏற்று, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து கடந்த மாதம் 27-ந் தேதி கடிதம் எழுதியது. எனவே வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தபால் ஓட்டு போடும் வாய்ப்பு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள தமிழகம், அசாம், மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் இதில் மத்திய அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அவ்வாறு இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான ஆலோசனையை நடத்த மத்திய அரசு விரும்புகிறது என தகவல் அறிந்த வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இது குறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறும்போது, “வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு தபால் ஓட்டு போடும் உரிமை வழங்க தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்ய வேண்டியது இருக்கிறது. இதுபற்றிய ஆலோசனை அதிகாரிகள் மட்டத்தில்தான் நடந்துள்ளது. இதில் அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்களையும் மத்திய அரசு பெற விரும்புகிறது” என தெரிவித்தன. எனவே வெளிநாட்டு இந்தியர்களுக்கு தபால் ஓட்டு உரிமை கிடைப்பது தாமதம் ஆகும் என தெரிகிறது.
Tags:    

Similar News