செய்திகள்
முதல் மந்திரி பினராயி விஜயன்

அனைவருக்கும் இலவச தடுப்பூசி - பினராயி விஜயனிடம் விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்

Published On 2020-12-14 21:42 GMT   |   Update On 2020-12-14 21:42 GMT
கேரளாவில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என அறிவித்தது தொடர்பாக, முதல் மந்திரி பினராயி விஜயனிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

இந்தியாவில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி இன்னும் சில வாரங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயன்பாட்டிற்கு வர உள்ள கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு போடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒவ்வொரு மாநில அரசும் தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.

கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்த உடன் அதை இலவசமாக போட பல்வேறு மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக போடுவோம் என ஏற்கனவே அறிவித்துள்ளன.
 
இதற்கிடையே, கேரளாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் அரசு செலவில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடந்து வரும் நிலையில் பினராயி விஜயனின் இந்த அறிவிப்பு தேர்தல் விதிமீறல் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், கேரளாவில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என அறிவித்தது தொடர்பாக, முதல் மந்திரி பினராயி விஜயனிடம் அம்மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.  
Tags:    

Similar News