செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

கொரோனா தடுப்பு பணியில் மிகப்பெரிய ஊழல்: தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு

Published On 2020-12-14 01:51 GMT   |   Update On 2020-12-14 01:51 GMT
கொரோனா தடுப்பு பணியில் மிகப்பெரிய ஊழல் நடந்து உள்ளதாக தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
மும்பை :

கொரோனா பிரச்சினை காரணமாக மாநில சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு 2 நாட்கள் மட்டுமே மும்பையில் நடக்கிறது. குளிர்கால கூட்டத்தொடரை 2 வாரங்கள் நடத்த வேண்டும் என்ற எதிர் கட்சியின் கோரிக்கையை மாநில அரசு நிராகரித்தாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இதுகுறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

கொரோனா தொற்றை கையாளுதல், புயல், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி செய்வது உள்ளிட்ட எல்லா வகையிலும் இந்த அரசு தோல்வி அடைந்துவிட்டது. இந்த ஆண்டு விவசாயிகளுக்கு இருண்ட தீபாவளியாக இருந்தது.

மராட்டியம் தவிர நாட்டின் மற்ற பகுதிகளில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மராட்டியத்தில் கொரோனாவுக்கு 48 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆய்வு செய்வது முக்கியமானதாகும்.

கொரோனா தடுப்பு பணியில் மிகப்பெரிய ஊழல் நடந்து உள்ளது. அரசு அதன் தோல்விகளை விவாதிப்பதில் இருந்து ஓடவே விரும்புகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News