செய்திகள்
ராகுல்காந்தி

விவசாயிகளின் வருமானத்தை குறைக்க மத்திய அரசு முயற்சி- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Published On 2020-12-11 17:43 GMT   |   Update On 2020-12-11 17:43 GMT
வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை குறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை குறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

விவசாயிகள் வருமானம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை சுட்டிக் காட்டி நேற்று அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:–

இந்திய விவசாய குடும்பங்களுக்கு ஒரு ஆண்டுக்கு சராசரியாக ரூ.77 ஆயிரத்து 124 வருமானமாக கிடைக்கிறது. பஞ்சாப் விவசாயிகள் ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 708 ஆண்டு வருமானமாக பெறுகிறார்கள். ஆனால் பீகார் விவசாயிகளுக்கு ஆண்டு வருமானமாக ரூ.42 ஆயிரத்து 684 மட்டுமே கிடைக்கிறது.

விவசாயிகள் தங்கள் வருமானம் பஞ்சாப் விவசாயிகளை போல இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வருமானம் பீகார் விவசாயிகள் வருமானத்தை போலவே இருக்க வேண்டும் என மோடி அரசாங்கம் விரும்புகிறது. 

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News