செய்திகள்
லாலு பிரசாத் யாதவ்

லாலுவின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு -மேலும் 6 வாரங்கள் காத்திருக்க வேண்டும்

Published On 2020-12-11 08:43 GMT   |   Update On 2020-12-11 08:43 GMT
தும்கா கருவூல நிதி மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராஞ்சி:

கால்நடை தீவன ஊழல் தொடா்பாக, பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் சில வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார். தும்கா கருவூல நிதி மோசடி வழக்கில் ஜாமீன் கிடைக்காத நிலையில் அவர் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வருகிறார். 

இந்நிலையில், கால்நடை தீவன வழக்கில் தொடர்புடைய தும்கா கருவூல நிதி மோசடி வழக்கில் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணைக்குப் பிறகு 6 வாரங்களுக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் லாலு, ஜாமீன் மீதான தீர்ப்புக்காக மேலும் 6 வாரங்கள் காத்திருக்க வேண்டும்.

லாலு தனது தண்டனைக் காலத்தின் பாதியை நிறைவு செய்யாததால் விசாரணையை தள்ளிவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதி தண்டனைக் காலத்தை நிறைவு செய்தால்தான், முன்கூட்டியே விடுவிக்க முடியும். பாதி தண்டனைக் காலம் முடியை இன்னும் 40 நாட்கள் உள்ளன.

கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் சிறைவாசம் அனுபவித்து வரும் லாலு பிரசாத், பல்வேறு உடல்நல கோளாறுகள் காரணமாக ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News