செய்திகள்
சோனியா காந்தி

சோனியா காந்தி தனது பிறந்தநாளை கொண்டாடமாட்டார் - காங்கிரஸ் அறிவிப்பு

Published On 2020-12-08 03:50 GMT   |   Update On 2020-12-08 03:50 GMT
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டும் சோனியா காந்தி நாளை தனது பிறந்தநாளை கொண்டாடமாட்டார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்திக்கு நாளை 74 வது பிறந்தநாள். வழக்கமாக சோனியா காந்தியின் பிறந்தநாளில் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்நிலையில், நாளை வர உள்ள தனது பிறந்தநாளை சோனியா காந்தி கொண்டடமாட்டார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டும் சோனியா நாளை தனது பிறந்தநாளை கொண்டாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News