செய்திகள்
மம்தா பானர்ஜி

காந்தியை கொன்றவர்களிடம் மேற்குவங்காளம் ஒருபோதும் தலைவணங்காது - மம்தா ஆவேசம்

Published On 2020-12-07 10:11 GMT   |   Update On 2020-12-07 10:11 GMT
மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மேற்குவங்காளம் ஒருபோதும் தலைவணங்காது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபை தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளபோதும் அரசியல் கட்சியினர் தற்போது முதலே பிரசார கூட்டங்களை நடத்தத்தொடங்கியுள்ளனர்.

வரும் சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட உள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த தேர்தலில் முக்கிய கட்சியாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த முறை மேற்குவங்காளத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜகவும், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசும் தற்போதில் இருந்தே தேர்தல் தொடர்பான பிரசார நிகழ்ச்சிகள், பொதுகூட்டங்கள் நடத்த தொடங்கிவிட்டன. 

இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை மோதல் தொடங்கியுள்ளது. இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சுமத்திவருகின்றன்.

இந்நிலையில், மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று பேரணி ஒன்றில் பங்கேற்றார். அந்த பேரணி நிகழ்ச்சியில் மம்தா பேசியவாதாவது:-

நாம் எவ்வளவு வேலை செய்தாலும், அவை அனைத்துமே மோசமானவை என முத்திரை குத்தப்படுகின்றன. பிஎம் கேர்ஸ் நிதி தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. அது பாஜகவினருக்கு மோசமானதாக தெரியவில்லை. ஆனால், அவர்கள் அம்பன் புயல் பாதிப்பு தொடர்பாக உருவாக்கப்பட்ட கணக்கு விவரங்களை கேட்கின்றனர்.

மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மேற்குவங்காளம் ஒருபோதும் தலைவணங்காது.

என்றார்.   
Tags:    

Similar News