செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா தடுப்பூசி வினியோகம் : டெல்லி, ஐதராபாத் விமான நிலையங்கள் தயார்

Published On 2020-12-05 20:53 GMT   |   Update On 2020-12-05 20:53 GMT
கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் டெல்லி மற்றும் ஐதராபாத் விமான நிலையங்கள் முக்கிய பங்காற்றும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுடெல்லி:

கொரோனா தொற்றுநோய்க்கான தடுப்பூசி இன்னும் சில வாரங்களில் வந்துவிடும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். விஞ்ஞானிகளின் ஒப்புதலுக்காக தடுப்பூசிகள் காத்திருக்கின்றன. இந்த தடுப்பூசிகளை நாடு முழுவதும் வினியோகிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து மாநிலங்களுக்கும் முறையாக அவற்றை வினியோகிக்க டெல்லி மற்றும் ஐதராபாத் விமான நிலையங்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளன. தடுப்பூசிகளை இருப்பு வைத்துக்கொள்வதற்கான போதிய வசதி இந்த இரு விமான நிலையங்களிலும் இருக்கிறது.

உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் கூடிய டெல்லி விமான நிலையத்தில் 2 பெரிய சரக்கு முனையங்கள் உள்ளன. இங்கு ஆண்டுக்கு 1.5 லட்சம் டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. மைனஸ் 20 டிகிரி முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை கொண்ட குளிரூட்டப்பட்ட அறைகள் உள்ளன. இங்கு தடுப்பூசிகளை பத்திரமாக பாதுகாக்க முடியும். ஐதராபாத் விமான நிலையத்திலும் இதுபோன்ற வசதிகள் உள்ளன. இதனால் கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் டெல்லி மற்றும் ஐதராபாத் விமான நிலையங்கள் முக்கிய பங்காற்றும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News