செய்திகள்
வாக்கு எண்ணிக்கை

ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- அதிக இடங்களில் பாஜக முன்னிலை

Published On 2020-12-04 06:43 GMT   |   Update On 2020-12-04 06:43 GMT
ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக அதிக வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி(டிஆர்எஸ்), காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ்  இ  இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. 

ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
 
இந்நிலையில், ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. மொத்தம் 30 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெறத் தொடங்கியது. இரண்டாவது இடத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி இருந்தது. 11 மணி நிலவரப்படி பாஜக 88 வார்டுகளிலும், டிஆர்எஸ் 32 வார்டுகளிலும் முன்னிலையில் இருந்தது. ஏஐஎம்ஐஎம் கட்சி 17 வார்டுகளில் முன்னிலை பெற்றிருந்தது. 

பாஜக வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றதால் அக்கட்சியினர் உற்சாகமாக உள்ளனர்.
Tags:    

Similar News