செய்திகள்
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

Published On 2020-12-04 05:20 GMT   |   Update On 2020-12-04 05:20 GMT
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 4 சதவீதமாக தொடரும். இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் 3.35 சதவீதமாக நீடிக்கும். வட்டி விகிதத்தை மாற்றாமல் நீடிக்க, நிதிக்கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக வாக்களித்தனர்.

2021ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.5 சதவீதமாக இருக்கும். வருங்காலங்களில் நகர்ப்புறங்களில் தேவை அதிகரிக்கும், கிராமங்களிலும் தேவை அதிகரித்துள்ளது. மூன்றாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 0.1% ஆகவும்,  நான்காம் காலாண்டுக்கு 0.7% ஆகவும் இருக்கும் என கணித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரெப்போ விகிதம் மாற்றப்படாததால் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காது. இது, பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.
Tags:    

Similar News