செய்திகள்
திருவனந்தபுரம் விமான நிலையம்

புரெவி புயலால் விமான சேவைகள் ரத்து- திருவனந்தபுரம் விமான நிலையம் 8 மணி நேரம் செயல்படாது

Published On 2020-12-04 04:44 GMT   |   Update On 2020-12-04 04:44 GMT
புரெவி புயல் அச்சுறுத்தல் காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்பட்டு, விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்:

புரெவி புயல் வழவிலுந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, ராமநாதபுரம் அருகே நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீண்டநேரமாக ஒரே இடத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால் கனமழைக்கான தொடர வாய்ப்பு உள்ளது. ராமேஸ்வரத்தில் கடுமையான சூறைக்காற்று வீசுகிறது. கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் நகர்ந்து கேரளாவை நோக்கி செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இன்று காலை 10 மணி முதல் விமான சேவைகள்  ரத்து செய்யப்பட்டன. மாலை 6 மணி வரை விமான நிலையம் மூடப்படுகிறது. அவசர தேவைகளுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வலுவிழந்த புரெவி புயல் கேரள மாநிலம் வழியாக செல்லும் வரை, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் எச்சரிக்கைகள் தொடரும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.
Tags:    

Similar News