செய்திகள்
பிரகாஷ் சிங் பாதல்

பத்ம விபூஷண் விருது வேண்டாம்: பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி முடிவு

Published On 2020-12-03 15:41 GMT   |   Update On 2020-12-03 15:41 GMT
விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது எனக்கூறி பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி பத்ம விபூஷண் விருதை அரசுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளார்.
வேளாண் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் நோக்கில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் இடையே எதிர்ப்பு வலுத்தது.

இதனைத்தொடர்ந்து இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் சார்பில் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவானது.

இதன்படி அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த
விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து 8-வது நாளாக இந்த போராட்டம் இன்றும் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதல் தனக்கு வழங்கியிருந்த பத்ம விபூஷண் விருதினை அரசுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளார். விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது என கூறிய அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விருது தனக்கு வேண்டாம் என கூறியுள்ளார்.
Tags:    

Similar News