செய்திகள்
வைரல் புகைப்படம்

விவசாயிகள் போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் தாக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

Published On 2020-12-03 04:55 GMT   |   Update On 2020-12-03 04:55 GMT
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் தாக்கப்பட்டதாக கூறி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் கடந்த சில நாட்களாக போராடி வருகின்றனர். இது தொடர்பாக 35 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில், போராட்டத்தின் போது முன்னாள் ராணுவ வீரர் தாக்கப்பட்டதாக கூறி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில் ராணுவ உடையில் வயதானவர் நிற்பதும், கண் காயத்திற்கு கட்டுப்போடப்பட்ட நிலையில், ஒருவர் அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.



வைரல் புகைப்படங்களில் இருவரும் ஒரே தோற்றம் கொண்டிருப்பதை கொண்டு, போராட்டத்தில் ராணுவ வீரர் தாக்கப்பட்டு இருக்கிறார் என நம்பி நெட்டிசன்கள் அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், ராணுவ உடையில் இருப்பது முன்னாள் இந்திய ராணுவ கேப்டன் பிரிதிபல் சிங் திலியன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் சமீபத்திய விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
 
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News