செய்திகள்
கோப்புப்படம்

வட இந்தியாவில் 8-ந்தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் - அகில இந்திய அமைப்பு எச்சரிக்கை

Published On 2020-12-03 00:27 GMT   |   Update On 2020-12-03 00:27 GMT
விவசாயிகளுக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்தவகையில் விவசாயிகளுக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இது குறித்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் (ஏ.ஐ.எம்.டி.சி.) தலைவர் குல்தரன்சிங் அத்வால் கூறுகையில், ‘விவசாயிகளின் போராட்டத்துக்கு தொடக்கம் முதலே ஏ.ஐ.எம்.டி.சி. தனது ஆதரவை தெரிவித்து உள்ளது. விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால், நாங்கள் வட இந்தியாவில் எங்கள் போக்குவரத்தை நிறுத்தவும், தொடர்ந்து விவசாயிகள் போராடும் நிலை ஏற்பட்டால் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

ஏ.ஐ.எம்.டி.சி கூட்டுக்குழு தலைவர் பல் மால்கித் சிங் கூறும்போது, ‘டெல்லி, காஷ்மீர், இமாசல பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஒட்டுமொத்த வட இந்தியாவிலும் வருகிற 8-ந்தேதி முதல் லாரிகள் ஓடாது. தொடர்ந்து விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், ஒட்டுமொத்த நாட்டுக்கும் இந்த போராட்டத்தை விரிவுபடுத்துவோம். வட இந்தியாவில் ஆயிரக்கணக்கான லாரிகள் காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை வினியோகித்து வருகின்றன. இந்த போராட்டத்தால் அவை அனைத்தும் பாதிக்கப்படும்’ என்று கூறினார்.
Tags:    

Similar News