செய்திகள்
கோப்புப்படம்

பா.ஜனதா தலைவர் நட்டாவுக்கு மோடி வாழ்த்து

Published On 2020-12-03 00:16 GMT   |   Update On 2020-12-03 00:16 GMT
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு நேற்று 60-வது பிறந்த தினமாகும். இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்
புதுடெல்லி:

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு நேற்று 60-வது பிறந்த தினமாகும். இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். “ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் பெற வாழ்த்துகிறேன். உங்கள் விவேகமான மற்றும் ஊக்கமளிக்கும் தலைமையின் கீழ் கட்சி புதிய உயரத்தை எட்டும்” என்று தனது டுவிட்டர் பதிவில் வாழ்த்து கூறி உள்ளார்.

உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்பட பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களும் நட்டாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். நட்டா இமாசலபிரதேச மாநிலத்தில் 1960-ம் ஆண்டு பிறந்தவர் ஆவார். அவர் சட்டமன்ற உறுப்பினராகவும், மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். முந்தைய மோடி அரசாங்கத்திலும் மத்திய மந்திரியாக பதவி வகித்தார்.
Tags:    

Similar News