செய்திகள்
ராகுல் காந்தி

இது கோட்டு-சூட்டு அணிபவர்களுக்கான அரசு - மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

Published On 2020-12-02 22:09 GMT   |   Update On 2020-12-02 22:09 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகிற விவசாயிகளின் போராட்டத்தில், மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
புதுடெல்லி:

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகிற விவசாயிகளின் போராட்டத்தில், மத்திய அரசை கடுமையாக சாடி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என மத்திய அரசு சொல்கிறது. ஆனால் அரசின் ‘நண்பர்கள்’ வருமானம்தான் 4 மடங்காக உயர்ந்துள்ளது. விவசாயிகள் வருமானம் பாதியாக குறைந்துள்ளது. இந்த அரசு பொய் சொல்கிறவர்கள், கொள்ளையடிப்பவர்கள், ‘கோட்டு -சூட்டு’ என மிடுக்காக உடை உடுத்துவோருக்கான அரசு” என கூறி உள்ளார்.

இந்த பதிவுடன் போராடும் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்த, தண்ணீரைப் பீய்ச்சியடித்த, முள்வேலி கொண்டு அவர்கள் வழியை தடுத்த காட்சிகளைக் கொண்ட வீடியோவையும் அவர் இணைத்துள்ளார்.

இதே போன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரில் விடுத்த பதிவில், “அரசின் நோக்கம், பாசாங்குத்தனம், தவறான பிரசாரங்களை ஊக்குவிப்பதுதான். இதனால் அரசின் திட்டங்கள் இறுதியில் தோல்வி அடையும்” என கூறி உள்ளார்.
Tags:    

Similar News