செய்திகள்
தேசிய பசுமை தீர்ப்பாயம்

கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்கு பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி

Published On 2020-12-02 12:17 GMT   |   Update On 2020-12-02 12:17 GMT
வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.
புதுடெல்லி:

கடந்தமாதம் முடிந்த தீபாவளி பண்டிகையின் போது நாடுமுழுவதும் பட்டாசு வெடிக்க கடுமையான கட்டுப்பாடுகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்திருந்தது. அத்துடன் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு மாநில அரசு சார்பில் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.

அதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பின்படி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களின் போது நள்ளிரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News