செய்திகள்
வைரல் புகைப்படம்

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

Published On 2020-12-02 05:11 GMT   |   Update On 2020-12-02 05:11 GMT
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


டெல்லி மற்றும் ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறி பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இந்நிலையில், பெரும் கூட்டத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது. 

இந்த புகைப்படம் சமீபத்திய டெல்லி போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் வானிலையை எதிர்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர் எனும் தலைப்பில் வைரல் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.



வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில் அது மார்ச் 10, 2018 அன்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த புகைப்படம் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அருகே 25 ஆயிரம் விவசாயிகள் கலந்து கொண்ட போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது ஆகும்.

அந்த வகையில் தற்சமயம் வைரலாகும் புகைப்படம் சமீபத்திய விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. உண்மையில் இது இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Tags:    

Similar News