செய்திகள்
போக்குவரத்து விதி மீறல்

போக்குவரத்து விதி மீறல்: பெங்களூருவில் ஒரே வாரத்தில் ரூ.3.35 கோடி அபராதம் வசூல்

Published On 2020-12-02 03:07 GMT   |   Update On 2020-12-02 03:07 GMT
பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கடந்த ஒரு வாரத்தில் வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.3.35 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு :

பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்து வருகிறார்கள். அதன்படி, கடந்த மாதம் (நவம்பர்) 23-ந் தேதியில் இருந்து 29-ந் தேதி வரை நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஒரு வாரம் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஹெல்மெட் அணியாதது, சிக்னலை மதிக்காமல் சென்றது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.3 கோடியே 34 லட்சத்து 89 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் 23-ந் தேதியில் இருந்து 29-ந் தேதி வரை விதிமுறைகளை மீறியதாக 79 ஆயிரத்து 359 வாகன ஓட்டிகள் மீது நகரில் உள்ள பல்வேறு போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. குறிப்பாக அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதாக 1,309 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.13 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என ரூ.54 லட்சத்து 55 ஆயிரமும், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியவில்லை என ரூ.93 லட்சத்து 28 ஆயிரமும் அபராதம் வசூலாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News