தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நியாயமானது என கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நியாயமானது - சித்தராமையா
பதிவு: டிசம்பர் 02, 2020 05:55
சித்தராமையா
பெங்களூரு:
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 6-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நியாயமானது என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சித்தராமையா வெளியிட்டுள்ள டுவிட்டரில் செய்தியில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது. அதற்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் நியாயமானது. அரசு விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பதிலாக அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். எங்களின் ஆதரவு விவசாயிகளுக்கு எப்போதும் உண்டு.
அதே போல் கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள நில சீர்திருத்த சட்டம் மற்றும் வேளாண்மை சந்தைகள் சட்டத்தை உடனே வாபஸ் பெறவேண்டும். இந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் விவசாயிகள் பெங்களூருவில் கூடி போராட்டம் நடத்தினர். ஆனால் மாநில அரசு இதை கண்டுகொள்ளவில்லை என பதிவிட்டுள்ளார்.
Related Tags :