கேரளாவில் அரசு பேருந்து இன்று காலை மரத்தில் மோதியதில் ஒருவர் பலியானார். 25 பேர் காயமடைந்தனர்.
அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்து: டிரைவர் பலி - கண்டக்டர் உள்பட 25 பேர் காயம்
பதிவு: நவம்பர் 30, 2020 10:50
மரத்தில் மோதி சேதடைந்த பேருந்து
கொச்சி:
கேரளாவின் கொச்சி நகரில் சக்கரபரம்பு என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு போக்குவரத்துக் கழக சொகுசு பேருந்து, இன்று காலை திடீரென மரம் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பக்க பகுதி உடைந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் பேருந்தின் டிரைவர் பலியானார். பேருந்தில் பயணம் செய்தவர்கள் உள்பட 25 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். கண்டக்டரின் நிலை மோசமாக உள்ளது. விபத்து நடந்தது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :