செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

உத்தவ் தாக்கரேவை போல எதிர்க்கட்சியை மிரட்டும் முதல்வரை பார்த்தது இல்லை - பட்னாவிஸ்

Published On 2020-11-29 00:11 GMT   |   Update On 2020-11-29 00:11 GMT
உத்தவ் தாக்கரேவை போல எதிர்க்கட்சியினரை மிரட்டும் முதல் மந்திரியை நான் பார்த்தது இல்லை என பா.ஜ.க. தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
மும்பை:

மகாராஷ்டிரா சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று விவசாயிகள் மற்றும் மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையில் ஆளும்கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். இதுதொடர்பாக அவர் மும்பை  பா.ஜ.க. அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

உத்தவ் தாக்கரே அரசாங்கம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதில் தோல்வி அடைந்துவிட்டது. அவர்களின் கோரிக்கைகளை அரசு முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. பருத்தி, சோயாபீன் பயிர்கள் பூச்சிகளால் அழிக்கப்படுகின்றன. ஆனால் அதற்கு நிவாரணமும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்திலும் அரசு முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. மந்திரிகள் அரசின் தோல்விகளை மறைத்துப் பேசி வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவை போல எதிர்க்கட்சியை மிரட்டும் எந்த முதல் மந்திரியையும் நான் பார்த்தது இல்லை. சமீபத்தில் மும்பை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகள் மாநிலத்தின் சட்டமீறல்களை எடுத்துக்காட்டுவதாக உள்ளன என தெரிவித்தார்.
Tags:    

Similar News