செய்திகள்
லாலு பிரசாத் யாதவ்

தும்கா கருவூல நிதி மோசடி வழக்கு- லாலுவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Published On 2020-11-27 08:51 GMT   |   Update On 2020-11-27 08:51 GMT
தும்கா கருவூல நிதி மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராஞ்சி:

கால்நடை தீவன ஊழல் தொடா்பாக, பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் சில வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார். சில வழக்குகளில் ஜாமீன் கிடைக்காத நிலையில் அவர் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வருகிறார். 

இந்நிலையில், கால்நடை தீவன வழக்கில் தொடர்புடைய தும்கா கருவூல நிதி மோசடி வழக்கில் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

லாலு அனைத்து சிறை விதிகளையும் பின்பற்றுவதாகவும்,  அடுத்த விசாரணையில் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஸ்மிதா அக்ரா தெரிவித்தார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் சிறைவாசம் அனுபவித்து வரும் லாலு பிரசாத், பல்வேறு உடல்நல கோளாறுகள் காரணமாக ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News