செய்திகள்
கோப்புப்படம்

இந்தியா தலைமையில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் சீன பிரதமர் பங்கேற்கிறார்

Published On 2020-11-27 00:12 GMT   |   Update On 2020-11-27 00:12 GMT
இந்தியா தலைமையில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 19-வது கவுன்சில் கூட்டத்தில் சீன பிரதமர் லி கெகியாங் பங்கேற்பார் என சீனா தெரிவித்துள்ளது.
பீஜிங்:

லடாக் எல்லையில் இந்தியா- சீனா இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் வருகிற 30-ந் தேதி இந்தியா தலைமையில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 19-வது கவுன்சில் கூட்டத்தில் சீன பிரதமர் லி கெகியாங் பங்கேற்பார் என சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறுகையில், “30-ந் தேதி காணொலி காட்சி வாயிலாக நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் லி கெகியாங் பங்கேற்பார். லி கெகியாங் மற்றும் பிற தலைவர்கள் பிராந்திய ஒத்துழைப்பு குறித்த ஒருமித்த கருத்தை உருவாக்குவார்கள். பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, உற்பத்தி திறன் இணைப்பு, கலாசாரம், தேசிய பொருளாதார மீட்சிக்கு தள்ளுதல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் விரிவான மற்றும் சிறந்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் விவாதிப்பார்கள்” என்றார்.
Tags:    

Similar News