செய்திகள்
மெகபூபா முப்தி

மெகபூபா முப்தியின் பிடிபி கட்சியில் இருந்து மேலும் 3 தலைவர்கள் ராஜினாமா

Published On 2020-11-26 15:45 GMT   |   Update On 2020-11-26 15:45 GMT
மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி பரூக் அப்துல்லாவின் ’பி’ அணியாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரியும் ஜம்முகாஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி சமீபகாலமாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார்.

குறிப்பாக காஷ்மீர் கொடியை மீண்டும் கொண்டுவந்தால் தான் இந்திய தேசியக்கொடியை ஏற்றுவோம் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். 

அவரத்து கருத்துக்கு பாஜக உள்பட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. மெகபூபா முப்தியின் கருத்தை தொடர்ந்து அவரது மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து டிஎஸ் பாஜ்வா, வேத் மகாஜன் மற்றும் ஹசன் ஏ வாஃபா ஆகிய 3 தலைவர்கள் தங்கள் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தனர். 

இதற்கிடையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தோடு மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. 

பிடிபி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட காஷ்மீரில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் இணைந்து குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கொண்டுவர வேண்டும் என முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், மெகபூபாவின் பிடிபி கட்சியில் இருந்து இன்று மேலும் 3 தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். டமென் பஷின், ஃபலில் சிங், ப்ரிடம் கொட்வால் ஆகிய மூன்று பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

முப்தி முகமது சையதால் தொடங்கப்பட்ட பிடிபி கட்சி தற்போது அதன் அரசியல் நிலைப்பாட்டில் இருந்து விலகி விட்டது. மேலும், பிடிபி கட்சி தற்போது பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியின் ’பி’ அணியாக மாறிவிட்டது. 

அதுமட்டுமல்லாமல் தற்போதுள்ள தலைவர்கள் கட்சியின் அடிப்படை கொள்கைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருவதால் பதவியில் இருந்து ராஜினாமா செய்தவாத அறிவித்துள்ளனர்.

இந்த ராஜினாமாவின் மூலம் பிடிபி கட்சியில் இருந்து கடந்த சில வாரங்களில் ராஜினாமா செய்த தலைவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News