செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டிய துரோகிகள் என கூறிய சிவசேனாவுக்கு பட்னாவிஸ் பதிலடி

Published On 2020-11-26 04:43 GMT   |   Update On 2020-11-26 04:43 GMT
ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினால், அவர்கள் அந்த நபரை மராட்டிய துரோகிகள் என கூறுகின்றனர் என சிவசேனாவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்தார்.
மும்பை :

புனேயில் நேற்று மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கங்கனா ரணாவத், அர்னாப் கோஸ்வாமி போன்றவர்களுக்கு ஆதரவு அளிப்பது, சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக்கின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியது போன்ற காரணங்களுக்காக, சிவசேனா பா.ஜனதாவை மராட்டிய துரோகிகள் என கூறியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளி்த்து கூறியதாவது:-

யாரோ ஒருவர் கூப்பிடுவதால், யாரும் மராட்டிய துரோகிகள் ஆகிவிடமுடியாது. அவர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினால், அவர்கள் அந்த நபரை மராட்டிய துரோகிகள் என கூறுகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது பா.ஜனதா தான் மராட்டியத்தின் அடையாளத்தை காக்க பணியாற்றியது. முதலீட்டை திரட்டுவதில் குஜராத்தை முந்தி, நாங்கள் மராட்டியத்தை முதல் மாநிலமாக மாற்றினோம். அப்போது முதல்-மந்திரியாக இருந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.

சிவசேனா, அவர்கள் மராட்டியம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவா் கூறினார்.

இதேபோல அவர் தேர்தல் நடைபெறும் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகளில் போலி வாக்காளர்கள் சோ்க்கப்படுவதாக குற்றம்சாட்டிய தேசியவாத காங்கிரசையும், லவ்-ஜிகாத் விவகாரத்தில் சிவசேனா கட்சியின் நிலைப்பாட்டையும் தேவேந்திர பட்னாவிஸ் கடுமையாக விமர்சித்து பேசினாா்.
Tags:    

Similar News