செய்திகள்
கோப்புப்படம்

தருண் கோகாய் எனது குரு - ராகுல் காந்தி உருக்கம்

Published On 2020-11-25 20:40 GMT   |   Update On 2020-11-25 20:40 GMT
மறைந்த அசாம் முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகாய் எனது குரு என ராகுல் காந்தி உருக்கமாக தெரிவித்தார்.
கவுகாத்தி:

அசாம் முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கவுகாத்தியில் உள்ள ஸ்ரீமந்த்ரா சங்கர்தேவா கலாச்சேத்திராவில் வைக்கப்பட்டு இருந்தது. கோவாவில் இருந்து தனி விமானம் மூலம் கவுகாத்தி வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தருண் கோகாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் ராகுல் காந்தி கூறுகையில், ‘தருண் கோகாய் அசாமுக்கு மட்டும் தலைவர் அல்ல. இந்த நாட்டுக்கே தலைவர். மக்களை ஒருங்கிணைத்து ஒற்றுமையை அனைவருக்கும் தெரியப்படுத்தியவர். நான் அவருடன் பல மணி நேரத்தை செலவிட்டுள்ளேன். அவர் எனது ஆசிரியர். எனது குரு. அசாமின் அழகை எனக்கு விரிவாக கூறியுள்ளார். அவர் இறந்தது தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு’ என்று உருக்கமாக தெரிவித்தார்.
Tags:    

Similar News